Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்

கோவையில் செப்டம்பர் 10, 11,12, தேதிகளில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்




கோவை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. கலைஅறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கல்விகடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

கோவை ஈச்சனாரி கற்பகம் உயர்கல்விஅகாடமியில் 10ந் தேதியும், 11ந் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், 12ந் தேதி பி.எஸ்.ஜி. பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியிலும் கல்விகடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இம்முகாமில் மாணவர்களுக்கு கல்விகடன் வழங்கும் பொருட்டு, மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலயே முதல்பட்டதாரி, வருமானம்,இருப்பிடச் சான்றுகள் மற்றும் பான்கார்டு ஆகிய சேவைகளை பெற 22.8.2024 முதல் 3.09.2024 வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சான்றுகள் மற்றும் பான்கார்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. கல்விகடன் பெறதகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன்வழங்கும் பொருட்டு கலெக்டர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு, 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கலெக்டர் அலுவலக தரைத்தளம் அறை எண் 16ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்விகடன் வழங்கும் பணியினை மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது. எனவே, உயர்கல்வி பயிலும் மாணவமாணவியர்கள் அனைவரும் கல்விகடன் வழங்கும்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறுகலெக்டர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments