மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் 21.06.2024 அன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது:-
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படும்".
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான உச்ச வயது வரம்பில் (Age Relaxation) 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் வேலைவாய்ப்பு பெரும் மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் 40 வயது ஆன நிலையில் பணியில் சேர்வதால், பணிவரன்முறை மற்றும் பதவி உயர்விற்காக அந்தந்த துறைகளால்நடத்தப்படும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதால் பணிவரன்முறை செய்தல் மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் உள்ளனர். குறிப்பாக, 50 வயதினை கடந்து அரசு பணியில் உள்ள பார்வைத்திறன். செவித்திறன் பாதிக்கப்பட்ட கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இவ்வகை மாற்றுத்திறனாளிகள் பணிவரன்முறை மற்றும் பதவி உயர்வு பெற்றிட ஏதுவாக அமையும் எனவும், மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு. மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அந்தந்த பதவிகளுக்குரிய துறைத் தேர்விலிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்து ஆணை வெளியிடுமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்