தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR-Agency) பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் நகர்ப்புர வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும், www.virudhunagar.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புர வாழ்வாதார மையத்தில் 05.09.2024 தேதி மாலை 05:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கான - தகுதிகள்
1.ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை (MS Office) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
2. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், 05.08.2024 தேதி நிலையில் அதிபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட கால களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் (ALF)-ல் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன் இது போன்ற மகளிர் குழுக்கள் சம்மபந்தப்பட்ட அலுவலகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்