Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Makkaludan Mudhalvar- மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் பகுதிகள்

Makkaludan Mudhalvar- மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் பகுதிகள்


மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களை பெற திருப்பூர் மாவட்டத்தில் நாளை 28.08.2024 திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தகவல் !!!

"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற திருப்பூர் மாவட்டத்தில் நாளை 28.08.2024 5, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை இரண்டாம்

கட்டமாக ஊரக பகுதிகளில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் 16.07.2024 முதல் 13.09.2024 வரை 76 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நாளை 28.08.2024 திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொரவலூர் ஸ்ரீ அண்ணன்மார் சுவாமி திருமண மண்டபத்தில் மேற்குப்பதி, பட்டம்பாளையம், சொக்கனூர். தொரவலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தேவனூர்புதூர் குலவிளக்கம்மன் மண்டபத்தில் தேவனூர்புதூர். செல்லப்பம்பாளையம். இராவணாபுரம் மற்றும் புங்கமுத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேடப்பட்டி கணியூர் மெயின்ரோடு அக்சரா திருமண மஹாலில் சோழமாதேவி, மைவாடி, வேடப்டடி ஆகிய ஊராட்சிகளுக்கும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொடுவாய் வி.எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் அலகுமலை, வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை.

கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,

காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவம்

மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,

கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்

நலத்துறை, தொழில்துறை, தொழிலளர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளது. எனவே, கீழ்

குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின்படி முகாம் நடைபெறும் நாட்களில்

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன்

அந்தத்த ஊராட்சிகளில் முகாம் நடைபெறும் இடங்களில் சமந்தப்பட்ட துறை

அலுவலர்களிடம் வழங்கி தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப.தெரிவித்துள்ளார்கள்

Post a Comment

0 Comments