சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித்திட்டம் 2025-2026
பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியானமாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
1. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் இளநிலைபடிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2024-2025 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
2. மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
3. வருவாய் துறை வட்டாட்சியர் (Tahsildar) வழங்கிய வருமான சான்றிதழின்படி, மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு(Rs.3,00,000/-) மிகாமல் இருக்கவேண்டும்.
4. ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும் (அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கை). இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேலே கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும்.
பிரிவு 1:மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3d of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3d of seats) முதல் பட்டதாரி மாணவர்கள், ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3td of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்றமாணவர்களுக்கு தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்
5. விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். 1) பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ், 2) சமீபத்திய வருமானசான்றிதழ் (ஒருவருடத்திற்குள்) வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். பிரிவு-1 மற்றும் பிரிவு-2 சேர்ந்த மாணவர்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்). மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்றிருக்க வேண்டும் (பொருந்தினால்), இறப்பு சான்றிதழ் (பொருந்தினால்). மேலேகுறிப்பிட்டுள்ள ஆவணங்கள் பதிவேற்றம் செய்யதவறினால் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். [வருமானசான்றிதழ் அல்லது முதல் பட்டதாரிசான்றிதழ் கிடைக்கதாமதமானால் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஒப்புதல் சீட்டை பதிவேற்றம் செய்யலாம், சான்றிதழை கலந்தாய்வுக்கு வரும்பொழுது சமர்ப்பிக்கவும்.]
6. இலவசக் கல்விதிட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) +2தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் (26.05.2025) பதிவேற்றம் செய்யவேண்டும்.
The last date for submission of online application is 26.05.2025.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்