நமது இந்திய நாட்டில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு,பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்.
தேசிய கொடியை தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
I) அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
II) மேலும் பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசியக்கொடி ஏற்றி விழாவை கொண்டாட வேண்டும்.
III) ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.
IV) மிகவும் முக்கியமானது என்னவென்றால் பிளாஸ்டிக் வகையான தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
V) மேலும் தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது எனவும் தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்