Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS ALERT -பயிர்க் காப்பீட்டுக்கு ஜூலை 31 கடைசிதமிழக அரசு அறிவிப்பு

NEWS ALERT -பயிர்க் காப்பீட்டுக்கு ஜூலை 31 கடைசிதமிழக அரசு அறிவிப்பு
பயிர்க் காப்பீட்டுக்கு ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மைத் துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள் ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய் திக் குறிப்பு:

நிகழாண்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்ப டும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத் திலுள்ள 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத் தைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிகழாண்டு குறுவை பருவத்தில், நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை, கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி, முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக் கலைப் பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments