மின்வாரியத்தில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத் துடன் (தென் மண்டலம் சென்னை) இணைந்து பட்டய பொறி யியலில் என்ஜினியரிங்-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட் பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்பட வுள்ளது.
இதில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் www. boat-srp.com எனும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண் ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்