Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN GOVT JOB - தமிழக அரசு வேலை-12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

TN GOVT JOB - தமிழக அரசு வேலை-12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் (1 பணியிடம்):

தொகுப்பூதியம் - ரூ.11,916/- (ஒரு மாதத்திற்கு)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

மேற்கண்ட பதவிக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001. தொலைபேசி எண்: 0431-2413055.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல்,

3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்

மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


அதிகாரப்பூர் அறிவிப்பு-CLICK HERE

Post a Comment

0 Comments