Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - குரூப் 4 தேர்வு எழுதுவோர்களுக்கு நல்ல வாய்ப்பு- அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

TNPSC - குரூப் 4 தேர்வு எழுதுவோர்களுக்கு நல்ல வாய்ப்பு- அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கமுதி தேவர் கல்லூரியில் வருகிற ஜூன் 2-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் ஜூன் 9- ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 6,644 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் பி.கே. மூக்கையாத் தேவர் அரசுப் போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி மையத்தில் மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு நகல் (ஹால் டிக்கெட் ஜெராக்ஸ்), மார்பளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்.

இதில் உடனடியாக விடைத்தாள் (ஓஎம்ஆர்) திருத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். முன்பதிவு செய்ய 8526778338, 9786139243 ஆகிய கைப்பேசி எண் களில் தொடர்பு கொள்ளலாம் என தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் தெரிவித்தது.

Post a Comment

0 Comments