பள்ளிக்கல்வி அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளுக்கான 2024-25 ஆம் கல்வியாண்டிற்குரிய நோட்டுப்புத்தகங்கள் பாடப்புத்தகங்கள். பள்ளிகளுக்கு வழங்குதல் தொடர்பாக
2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ/மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அவர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார்வை 2 ல் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து 31.05.2024 -க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் போது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர்களிடமிருந்து (இடைநிலை) இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட்ட தேவைப்பட்டியலின் அடிப்படையில் நோட்டுப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதை
மாவட்டக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள். நோட்டுப்புத்தகங்கள், பெறப்பட்ட விவரத்தினை இருப்புப் பதிவேட்டில் (Stock Register) சார்ந்த அலுவலர்களால் உரிய பதிவுகள் மேற்கொண்ட பின்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
பாடப்புத்தகங்கள். நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்போது வழங்கப்பட்ட விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் (Distribution Register) பதிவு செய்யப்பட வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர்களிடம் பாடப்புத்தகங்கள். நோட்டுப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு தேவையான அளவில் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கையொப்பம் பெற்று மாவட்டக்கல்வி அலுவலக கோப்பில் பராமரிக்க வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்