Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை

19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய் யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி.எஸ்சி. டயாலிசிஸ் தொழில்நுட்பம், பி.எஸ்சி, மருத்துவ உதவியாளர் உள்பட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 200 பட்டப்படிப்பு ர இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. 

இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் ச விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், https://tnmedicalselection.netஎன்ற இணை யதளத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப் பிக்கலாம்.

Post a Comment

0 Comments