இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி நியமனம் - 2024
இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொடக்கக் கல்வி பணியிடங்களுக்கான சிறப்பு விதிகளின் கீழ் கோரப்பட்டுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நிகழ்நிலை விண்ணப்பங்கள் 15.03.2024 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே பெறப்படும்.
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET தாள்- I) தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
(அரசாணை (நிலை) எண்:149 பள்ளிக் கல்வி (ஆ.தே.வா)த்துறை நாள்: 20.07.2018]
எச்சரிக்கை
நியாயமற்ற வழிகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் முகவர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பதாரர்களை எச்சரிக்கிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைப் பணியிடங்களுக்கான சிறப்பு விதிகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக் கான நேரடி நியமனம் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது.
நியாயமற்ற வழிகளில் ஏமாற்றும் முகவர்களை நம்பி ஏமாந்தால், அதனால்விண்ணப்பதாரர்களுக்கு . ஏற்படும் இழப்புகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது.
நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தில் அளிக்கப்படும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே பொறுப்பு. நிகழ்நிலையில் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகளுக்கு இணைய சேவை மையங்கள்/ பொது சேவை மையங்கள் ஆகியோரை குறை கூற முடியாது. எனவே விண்ணப்பதாரர்கள் தாங்களாகவோ அல்லது தங்கள் முன்னிலையிலோ நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தை சரிபார்த்து இறுதியாக அதைச் சமர்ப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் சரியானதா என உறுதி செய்த பின் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறு நேர்ந்தால் தவறுகளுக்கு
ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது.
நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் பொழுது நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட அனைத்து விவரங்களுக்கும் ஆதாரமாக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நிகழ்நிலை (Online) விண்ணப்பம் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவில்லையெனில் நிகழ்நிலை (Online) இணையதளம் விண்ணப்பங்களைஏற்றுக்கொள்ளாது. ஆகவே விண்ணப்பதாரர்கள் தாங்கள் அளிக்கும் விவரங்கள்
சரியானவைதானா என உறுதி செய்த பின்னரே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நேரடி நியமனத்திற்கு நிகழ்நிலையில் (Online) விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் / அறிவுரைகள் மற்றும்
வழிகாட்டுதல்களையும் (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளத்தில் விவரங்கள் தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்பே தொலைபேசி (18004256753) அல்லது மின்னஞ்சல்(trbgrievances@tn.gov.in) மூலம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை (Onlinc) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்