ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 19.02.2024 முதல் 25.02.2024 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள்(Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வர்கள் வினாத்தாள்("A" series question paper) TRB website.co வெளியிடப்பட்டுள்ளதற்குரிய தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபணை (objection) தெரிவிக்கும்போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
மாற்றுத்திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) பகுதி-B-ல் வினா எண் 31முதல் 180 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம். பகுதி-A-ல் உள்ள 01 முதல் 30 வரையிலான கட்டாயத் தமிழ்மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் மாற்றுத்திறன் படைத்த தேர்வர்கள் (PWD candidates) தெரிவிக்கக்கூடாது. மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்