Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TNPSC NEWS: டிஎன்பிஎஸ்சி இன்று (15.02.2024) வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

TNPSC NEWS: டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை. 600 003 செய்தி வெளியீடு
ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 03.02.2023, 15.06.2023 மற்றும் 30.08.2023 நாளிட்ட அறிவிக்கை எண்கள் முறையே 05/2023, 5A/2023 மற்றும் 5B/2023 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துதேர்வு கடந்த 27.05.2023 மு.ப. மற்றும் பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 19.09.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த பொறியாளர் சார்நிலைப்பணிகளில், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியாளர் சார்நிலைப்பணிகளில் அடங்கிய இளநிலை வரைதொழில் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 22.02.2024 மு.ப. மற்றும் பி.ப. அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை 600 003.ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண்./இடஒதுக்கிட்டு விதி / காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு

ஏற்ப கலந்தாய்விற்கு றகு அ அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு

அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரதவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES (EXAMINATION) (Counselling)-CLICK HERE

Post a Comment

0 Comments