அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் "மாணவர்களின் கலை மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாண்டு 2023-24இல் முதன் முதன்முதலாக பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் (Cultural & Sports week) கொண்டாடப்படவுள்ளது. இச்செயல்பாடுகளில் நடைப்பெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அ. பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பின்வரும் அட்டவணையின்படி கலாச்சார மற்றும் விளையாட்டு வாரம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
போட்டிகள் நடத்துதல் சார்ந்த வழிகாட்டுதல்கள் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் சார்ந்த போட்டிகள் பள்ளி, வட்டாரம் மற்றும் மாநில அளவில் நடத்துதல் சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
(I) பள்ளி அளவிலான போட்டிகள்
முதலில் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் விவரங்கள் EMIS தளத்தில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
மேற்காண் போட்டிகள் அனைத்தும் பள்ளி அளவில் முதலில் நடத்தப்படவேண்டும்.
ஒவ்வொரு தனி போட்டிகளுக்கு ஒரு வெற்றியாளரை தெரிவு செய்தல் வேண்டும். அது போல குழு போட்டிக்கும் அவ்வாறே ஒரு குழுவினரை தெரிவு செய்தல் வேண்டும்.
வரைந்து வண்ணம் தீட்டுதல் மற்றும் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவரின் படைப்புகளை சார்ந்த மாவட்ட வட்டார வள மையத்தில் நேரிடையாக சென்று போட்டி நிறைவடைந்த அடுத்த நாளே ஒப்படைத்தல் வேண்டும். முன்னதாக மாணவரது படைப்பினை போட்டி நிறைவடைந்தவுடன் high resolution புகைப்படம் எடுத்து அப்புகைப்படத்தினை வட்டார வளமைய மேற்பார்வையாளரிடமிருந்து பெறப்படும் GOOGLE படிவம் மூலம் சார்ந்த வட்டார வளமையத்திற்கு போட்டிகள் நிறைவுற்றவுடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகள் அனுப்புதல் வேண்டும்.
கதை சொல்லுதல், பாரம்பரிய உடை அணிதல், பாரம்பரிய நடனம். இசைக் கருவி இசைத்தல், பாட்டுப் போட்டி மற்றும் நாட்டிய நாடகம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற தனி மாணவர் அல்லது குழுவினரின் சார்ந்த செயல்பாடுகளை வீடியோ எடுத்து வட்டார வளமைய GOOGLE படிவம் மூலம் சார்ந்த வட்டார வளமையத்திற்கு போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகள் அனுப்புதல் வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கருப்பலகையில் கீழ்காணும் விவரங்கள் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் மாணவர்கள் வீடியோவில் பின் புலத்தில் காணப்பட வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்