சென்னை மாவட்ட, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 29-01-2024 முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், விவரங்களுக்கு, decgc.chennai@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

1 Comments
Hi
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்