Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PRACTICAL EXAM- தமிழ்நாட்டில் 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி, வழிகாட்டுதல்கள்-பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு-பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு:

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியரை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும்.

செய்முறை தேர்வின் போது பள்ளிகளுக்கு வருகை தராத மாணவர்களின் விவரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments