Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

அரசுத்துறைகளின் சேவைகளை மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் - எந்தெந்த பகுதிகள்

அரசுத்துறைகளின் சேவைகளை மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கும் மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்கள்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடி திட்டமான மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் மூலம் 13 துறைகளில் 50-க்கும் மேற்பட்ட சேவைகளை அந்தந்த ஊர்களுக்கே சென்று வழங்கும் சிறப்பு முகாம்கள் 05.012024 முதல் 23.012024 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 4 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் வருவாய், உள்ளாட்சி, காவல், தொழிலாளர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட 13 துறைகளின் சார்பில் வழங்கப்படும் 50-க்கும் மேற்பட்ட சேவைகளை அவரவர் பகுதியிலேயே பெற்றுக்கொள்ளலாம். இதில் வீட்டு வரி, திட்ட அனுமதி, குடும்ப அட்டை, புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம், வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றுகள், மானிய கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அடங்கும். முகாம்களில் சேவைக்கான விண்ணப்பங்களை முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக 50% சலுகை கட்டணத்தில் சிறப்பு இ-சேவை மையங்கள் முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை பதிவு செய்து ரசீது பெற்றவுடன் எந்த துறையில் சேவையை பெற வேண்டுமோ அந்த துறையின் அரங்கிற்கு சென்று விண்ணப்பங்களை அளித்து கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், அதற்கான விவரங்களையும் பெற்று அதை உடனுக்குடன் வழங்கி பொதுமக்கள் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களின் மீது இயன்ற அளவு விரைவாகவும், அதிகபட்சம் 30 நாட்களுக்குள்ளும் முழுமையான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவான கோரிக்கை மனுக்களை பொறுப்பு அலுவலரிடம் வழங்கலாம்.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் நல்ல முறையில் கிடைப்பதை உறுதி செய்திட ஒவ்வொரு முகாமிற்கும் துணை ஆட்சியர் / உதவி இயக்குனர் நிலையில் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் நடைபெறும் இந்த முகாம் அடுத்த கட்டமாக கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மக்கள் அரசின் பல்வேறு துறைகளை நாடிச் சென்று பெறக்கூடியசேவைகளை அந்தந்த ஊர்களுக்கே அனைத்து துறைகளும் நேரடியாக சென்று வழங்கக்கூடிய இந்த சிறப்புமிக்க திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி சிறந்த முறையில் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



Post a Comment

0 Comments