Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

1000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு:(Pongal Gift-2024)


ரேஷன் அட்டைதாரர்களுக்கு நடப்பு ஆண்டும் (2024) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகை:

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 ரூபாய் Pongal Gift பொருட்கள்  தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இந்த அறிவிப்பு எப்பொழுது அறிவிக்கப்படும் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளன.ஜனவரி 9ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மக்களுக்கு ஜனவரி மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை , பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் தமிழக அரசு அறிவிக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதம் மட்டும் 2000 ரூபாய் பெறலாம்.

Post a Comment

0 Comments