தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ஆயிரம் ரூபாய் மொக்கை பணம் யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யார் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்கும்?
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று 02.01.2024 தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகையான 1000 ரூபாய் யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள்,பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்