Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP IV தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இது உங்களுக்கான செய்தி

திருப்பத்துார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்துார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 02.01.2024 திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/6NemVgcZWTaGb98p9 என்ற இணைப்பின் பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண்: 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு TNPSC தேர்வில் வெற்றி பெறலாம்.

Post a Comment

0 Comments