பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்தினால் மாற்றுத்திறனாளியானதற்கான காப்பீடு பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் பெறலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022-க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் யாரேனும் 31.03.2022-க்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 31.03.2022-க்கு பிறகு யாரேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ, மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள், தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் துறை அலுவலக கட்டிட வளாகம், 2ம் தளம், பெருமாள் புரம், திருமால் நகர், திருநெல்வேலி-627007, தொலைபேசி எண்:0462-2555014 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்