Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வி -ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொடக்க கல்வி நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் மதிப்பூதியம் உயர்வு

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் (தொடக்கக் கல்வி சங்கத்தின் சார்பில் தங்களது மதிப்பூதியத்தினை ரூ.20,000/-லிருந்து ரூ.25,000/- ஆக உயர்த்தி வழங்கிடவும், காலமுறை ஊதியம் வழங்கிடவும். பணியினை நிரந்தரம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் அளித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில், மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளின் நலன் கருதி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 இன்படி, மாற்றுத்திறனுடைய பள்ளி வயதில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கை அளித்தும் அவர்களின் மாற்றுத்திறன் தன்மையை பொறுத்து அவர்களுக்கான சிறப்புக் கல்வியும், சிகிச்சை / பயிற்சிகளும் சிறப்பு பயிற்றுநர்களால் ஆயத்த பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தற்பொழுது தொடக்கக் கல்வி நிலையில் 1995 சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் குறித்து பின்வரும் விவரங்களை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments