Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

10-ம் வகுப்பு பொது தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித்தேர்வர்கள் பதிவு செய்வது தொடர்பான செய்தி குறிப்பு

2023-2024, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது தொடர்பான

செய்திக் குறிப்பு

செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்தல்:


நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை மற்றும் 06.11.2023 முதல் 10.11.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்சமயம் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 28.12.2023 (வியாழக்கிழமை) முதல் 05.01.2024 (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

எனவே தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து 05.01.2024- ற்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை நேரில் அணுகி. பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பொதுத்தேர்விற்கு பதிவு செய்தல்

செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்து பயிற்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமே அறிவியல் பாடப் பொதுத்தேர்வெழுத இயலும்.

மார்ச்/ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள இத்தேர்வர்கள் (முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள / ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத தேர்வர்கள்). 27.12.2023 ( புதன் கிழமை) முதல் 10.01.2024 (புதன்கிழமை) வரை மற்றும் சிறப்பு அனுமதித்திட்டத்தில் 11.01.2024 (வியாழக்கிழமை)முதல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பித்து பொது தேர்விற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் வழங்கப்படும் மார்ச்/ஏப்ரல் 2024 கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைக் கொண்டே தேர்வர்கள் செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments