Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

kalai thiruvizha news-அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி-தேதி -வழிகாட்டு நெறிமுறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல்

அனைத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30.11.2023, 01.12.2023 & 02.12.2023 வரை கீழ்காணும் நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிாருள் நடைபெறவுள்ளது. 

மேலும் இம்மையத்திற்கு கீழ்காணும் பணியாளர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மேற்காண் மையங்களுக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்தல் சார்ந்து வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

38 மாவட்டங்களிலிருந்து மாவட்ட அளவில் மூன்று பிரிவுகளில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிட பொறுப்பு ஆசிரியர் துணையுடன் (1:10) நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்து வருதல் வேண்டும். இதற்கான போக்குவரத்து வசதியினை வெற்றி பெற்ற மாணவர்கள் சார்ந்த பள்ளிகள் சொந்த பொறுப்பில் ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.



Post a Comment

0 Comments