Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC புதிய செய்தி:உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வு -தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (HALL TICKET) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

13.10.2023 முதல் 17.10.2023 வரை நடைபெற உள்ள தமிழ்நாடு வனப்பணியில் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதன்மைத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) – தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (HALL TICKET) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 36/2022, நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி (தொகுதி -IA பணிகளில்) உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) 13.10.2023 முதல் 17.10.2023 வரை சென்னை மாவட்ட மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard)) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

Post a Comment

0 Comments