Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் 110-ன் கீழ் அளித்த அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், வணிக வரி சமாதானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை




மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் ஓர் அறிக்கையை இந்த அவையில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும், சிறு வணிகர்களின் நலன் காத்திடுவதற்கான மேலும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும், இந்த அரசு செயல்படுத்த உள்ள 'புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டம்' பற்றிய அறிவிப்பை 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகின்றேன்.


Post a Comment

0 Comments