நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனத்திற்காகா மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும் 5 உலமாக்கள் மற்றும் 2 இஸ்லாமிய முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட அளவிலான காஜி குழு அமைத்திடவும், மேலும் இக்குழு இஸ்லாமிய சட்டவியலில் நிபுணத்துவமிக்க ஆலிம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரபுக் கல்லூரி அல்லது நிறுவனத்தில் பேராசிரியர் அல்லது ஆசிரியராக பணிபுரிந்த நபர்களில் 3 நபர்களுக்கு குறையாமல் தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலை (Panel) நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களை கலந்தாலோசித்த பின்னர், காஜி நியமனம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் மேற்படி பரிந்துரைகளை ஆய்வு செய்து காஜி சட்டம் 1880 (மைய சட்டம்-XII-1880) பிரிவு-2-ன் கீழ் தகுதி வாய்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை காஜியாக நியமனம் செய்ய அரசாணையிடப்பட்டுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் தேர்வுக் குழுவால் நியமன செய்யப்பட்ட காஜி அவர்களின் பதவி காலம் 13.09.2023 அன்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் 29.09.2023-க்குள் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்