விண்ணப்பங்கள் வரவேற்பு:
மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களிலும் உள்ள 206745 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டு 41:349 சிறப்பு சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நோடியாக விற்பனை செய்ய மதி 'எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் க அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது.
எனவே விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள் ஆண் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். மேற்கண்ட முன்னுரிமை தகுதியில் விண்ணப்பங்கள் எதும் பெறப்படவில்லை எனில் பொது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்