குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் காலை 10.00 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டிகளில் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்குபெறலாம்.
தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல்
ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள்போட்டியில் பங்கேற்கலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.6500/-மும், இரண்டாம் பரிசாக ரூ.4500/-மும், மூன்றாம் பரிசாக ரூ.3500/-மும் வழங்கப்படவுள்ளது. மேலும், முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் www.artandculture.tn.gov.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலைப்போட்டிகள் நடைபெறும் இடம்:
மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு,
(தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி - 7. தொலைபேசி எண்:0462-2901890
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்