Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர் உரிமை தொகை- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





மேலும் மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதிமுதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியர்கள் பரிசீலிப்பர்.

கைப்பேசி குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்கவேண்டுமெனவும் தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments