Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சமூக நலத்துறை News -இலவச தையல் இயந்திரங்கள்


திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


அவ்வாறு தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை சமூகநல இயக்குநர் அவர்களின் அறிவிப்பின் படி 01.08.2023 முதல் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கக் கோரும் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான லிங்க் அரசு இ-சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 எனவே பொதுமக்கள் இனி வருங்காலங்களில் சத்தியவாணி அம்மையார் நினைவு இலனச் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 20 முதல் 40 வயதிற்குட்பட்ட நையல் பெண்கள் அருகில் உள்ள இ-சேனை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் ஆவணங்கள்:

1. பள்ளி/கல்லூரி மாற்றுச்சான்றிதழ் (வயது வரம்பு 20-40)

2. இருப்பிட சான்றிதழ்

3. வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் 72000/-க்குள்)

4.சாதி சான்றிதழ் 5. குடும்ப அட்டை

6. ஆதார் அட்டை

7. தையல் பயிற்சி சான்றிதழ் (மொத பயிற்சிக்கு குறையாமல்

8. விதவை எனில் விதவை சான்று

9. கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான சான்று

Post a Comment

0 Comments