Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்லூரி விடுதி சேர்க்கை பத்திரிக்கை செய்தி


திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், கரியம்பட்டி கிராமம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் (B.A.TAMIL), இளங்கலை ஆங்கிலம் (B.A.English), இளங்கலை வணிகவியல் (B.Com), இளங்கலை இயற்பியல் (B.5c., Physics) (B.SC, Mathematics) கணிதவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் (B.B.A), இளநிலை கணினி அறிவியல் (B.Sc. Computer Science), கணினி பயன்பாட்டியல் (B.CA) வணிக கணினிபயன்பாட்டியல் (B.Com(CA)) போன்ற இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளான முதுகலை கணிதம் (M.Sc Maths), முதுகலை கணினி அறிவியல் (M.Sc Computer Science). முதுகலை வணிகவியல் (M.Com), முதுகலை கணினி பயன்பாட்டியல் (M.CA) போன்ற பாடபிரிவுகள் செயல்பட்டு வருகிறது-

இக்கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்து கல்வி பயில விரும்பும் பழங்குடியின மாணவியர்கள் மற்றும் ஏற்கனவே கல்லூரியில் கல்வி பயின்று வரும் பழங்குடியின மாணவியர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் திருப்பத்தூர் வட்டம், கும்மிடிகாம்பட்டி அஞ்சல், முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள M.S.N. Complex பழைய இந்தியன் வங்கி கெஜல்நாய்க்கன்பட்டி தெரிவு செய்யப்பட்டு வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படவுள்ளது.

எனவே,மேற்கண்ட விவரப்படி பழங்குடியின மாணவியர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி மேற்படிப்பு தொடர அறிவுறுத்தப்படுகிறது. கல்லூரி விடுதியின் சேர்க்கை விண்ணப்பங்கள் 05.09.2023க்குள் அலுவலக வேவை நாட்களில் கீழ்கண்ட முகவரியில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளும் முகவரி விவரம்

1. முதல்வர்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கரியம்பட்டி, பாப்பம்மாள் நகர்,

திருப்பத்தூர்-635901.

2. திட்ட அலுவலகம்,

பழங்குடியினர் நலம், 4வது மாடி, பி-பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், திருப்பத்தூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments