Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Recruitment Board: இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

TRB இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

12-07-2023 Press News - BEO Online Application- Provided Edit Option. 

சென்னை 06, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 05.06.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 12.07.2023 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கி ஏற்கனவே அறிவிப்பு

தற்போது, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

1. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.


2. விண்ணப்பதாரர்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள "சமர்ப்பி" (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 



Post a Comment

0 Comments