Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் + விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு நிர்வாக அனுமதி மற்றும்
நிதி ஒப்பளிப்பு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்"

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

பெண் நிகர் என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். 

1. வரலாற்றுப் பின்புலம்

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும். உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறியபோதுகூட, உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கபட்டார்கள்.

Post a Comment

0 Comments