மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, மாண்புமிகு அமைச்சர் (நிதி, மனிதவள மேலாண்மை) அவர்களால், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது:-
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்தஇளைஞர்கள்.
முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.
தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
2மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும்,அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் (Tuition fee) முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்று ஆணையிட்டது.
மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்வதற்கும், முன்னுரிமை முறை பின்பற்றப்படும் பணியாளர் தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் பொருட்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் வழங்கிடும் வகையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான ஆணைகள் / அறிவுறுத்தல்களை வழங்குமாறு மனிதவள மேலாண்மைத்துறை கேட்டுக் கொண்டது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்