இதுவரை காகிதத்தில் நிரப்பப்பட்டு வந்த படிவங்களை இணைய வழிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கிலும், கல்லூரியைப் பற்றிய விவரங்களைப் பொது மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி புதியதாக aasc.tn.gov.in என்ற பெயரில் வலைத்தளம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
Web portal எனப்படும் இந்த வலைத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படவுள்ள பயிற்சி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். பயிற்சி பெறுவோரின் பட்டியலைத் 'தயாரித்தல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடல், பயிற்சியாளர்களின் பின்னூட்டம் பெறுதல், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை அளித்தல் என்று இதுவரை காகிதங்களில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்தும் இனி இணைய வழியில் செயல்படுத்தப்படும். இதன் காரணமாக கால விரையம் தவிர்க்கப்படுவதுடன் அனைத்து விவரங்களும் எப்போதும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் இணையதளத்தில் பாதுகாப்பாக இருக்கும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்