Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

வருகிற 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 47வது சர்வதேச திறன் போட்டிகள் பிரான்ஸில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. 




இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் 55 தொழிற் பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க naanmudhalvan.in.gov.in/tnskills/ என்கிற இணையத்தளம் மூலமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும்.

இதற்கான வயது வரம்பு 01.01.1999 அன்றும், அதன் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 01.01.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். 

5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் தகுதிபெற்றவர்கள், பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ). தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டு இருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இது தொடர்பான விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், (வட சென்னைஅரசினர் தொழிற் பயிற்சிநிலைய வளாகம்), சென்னை-21 என்கிற முகவரியில் அணுகலாம். தொடர்பு தொலைபேசி எண் 044-25201163

Post a Comment

0 Comments