Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டிகள் -10,000 ரூபாய் பரிசு


11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை,கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நிகழாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் எல்.ஆர்.ஜி. அரசு 30.06.2023 ஆம் (வெள்ளிக்கிழமை) நாளன்று திருப்பூர் மகளிர் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளன. 

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து பள்ளித் தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் (மு.கூ.பொ) அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொருப் போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். 

போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/- வீதம் மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.66,000/- காசோலையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments