Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WhatsApp -ல் புதிய வசதி - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

WhatsApp New Features





WhatsApp மக்களை கவரும் வகையில் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.


இதனை தொடர்ந்து தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ் அப்பில் வழக்கமாக மொபைல் எண்ணை பயன்படுத்தி WhatsApp Account open செய்ய முடியும். 


புதிய வசதியான மொபைல் எண்ணை பயன்படுத்தாமல்  எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனாளிகள் அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை (Username)கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் இதே போன்ற வசதி அடிப்படையாகக் கொண்டு Telegram, Instagram, Twitter  போன்ற சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இந்த புதிய வசதியை whatsapp நிறுவனம் மிக விரைவில்  அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன.


Username -ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்கள் தனித்துவத்தையும், பயனாளரின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments