Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Water supply Stop : நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் ஏற்படும் இடங்கள்

சென்னையில் குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக அம்பத்தூர்,கோடம்பாக்கம், ஆலந்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட ஏழு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் வீநியோகிக்கப்படும் குடிநீர் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக( Water supply Stop) தெரிவித்துள்ளது.




இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி :

 Chennai ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ். குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 700 மி.மீ. விட்ட முள்ள உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப். சந்திப்பில்) 1500 மி.மீ. விட்ட முள்ள பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.

இதனால் Sunday காலை 6 மணி முதல் Monday காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு குழாங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம்  நிறுத்தம்( Water supply Stop) செய்யப்படுகிறது. 


மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Website Link -CLICK HERE

Post a Comment

0 Comments