தமிழக BJP தலைவர் கே.அண்ணாமலையும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
TEACHER ELIGIBILITY TEST- ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டும்எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் அப்படியில்லை என்றால் அவர்களுடைய போராட்டத்தில் பா.ஜ.க. இணைந்து மிகப்பெரிய அளவில் போராட் டத்தை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர்தொல்.திருமாவளவன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கை ஜனநாயகப்பூர்வமானது என்றும் இதை நிராகரிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
உங்கள் கோரிக்கைக்கு அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உங்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வது எங்களது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்