Teacher eligibility test - ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017 & 2019 ஆண்டிற்கான தாள்-1 & 11 ஆகியவற்றிக்கான மறபிரதி சான்றிதழ்களின் விவரங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு ( Teacher Eligibility Test) 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான தாள் 1 & 11 ஆகியவற்றிக்கான மறுபிரதி சான்றிதழ்கள் இணையதளத்தின் வழியாக வழங்க இருப்பதால் முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும் மறுபிரதி கோரும் விண்ணப்பங்களை இனி வருங்காலங்களில் 15.05.2023 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.
மேற்படி மறுபிரதி சான்றிதழ்கள் பெறுவதற்கு eSevai மையத்தை அனுகும்படியும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களிடம் மறுபிரதி கட்டணத் தொகை ரூ.100/- (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் eSevai நிறுவனத்திற்கான சேவைக் கட்டணத் தொகை ரூ.60/- சேர்த்து மொத்தத் தொகை ரூ.160/- யை e.Sevai மையத்தில் செலுத்தி மறுபிரதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் படி விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தும்படி சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்