Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education News:அரசுப் பள்ளிகளில் அலுவலக பணியாளர்கள் வேலை நேரம் மாற்றம் - முழு விவரங்கள்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


Government School -ல் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் புதன் கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

School -ல் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் 5.45 மணி வரையில் உள்ளதால் பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல் மற்றும் ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல்  பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாகக் குறைபாடு ஏற்படுகிறது.

பள்ளிகளின் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது. 

மேலும், Government School -ல் நிர்வாக மேம்பாட்டுக்காக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. 

எனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 Summer விடுமுறை, School விடுமுறை நாள்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments