Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் பதிவு செய்யும் முறை




தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை 2023 (TNGASA- 2023) என்பது இணையவழி விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதாக அமையும். விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தல் மற்றும் சான்றிதழ்கன ழ்களை பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும். கலந்தாய்வின் நடைமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது:

1. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தாங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். இணையதள வசதி இல்லாதவர்கள், அருகிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் Admission Facilitation Center (AFC)-2023 மூலம் இதைச் செய்யலாம்.

2. பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விருப்பப்படி பதிவு செய்தல். 3. தாவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரி வலைத்தளங்களில் வெளியிடப்படும். மூன்று

தரவரிசை பட்டியல் உள்ளது அவை பின்வருமாறு: தமிழ் தரவரிசை பட்டியல் : பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. தமிழ் இலக்கியம் / பி.லிட் படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுதப்படும்.

ஆங்கிலம் தரவரிசை பட்டியல் : பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆங்கிலம் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுதப்படும்.

பொது தரவரிசை பட்டியல்: மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் (400 மதிப்பெண்களில்) இது தயாரிக்கப்படும். இது மற்ற அனைத்து B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A./B.S.W படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுதப்படும்.

4. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்த பாடப்பிரிவுகளின்விருப்ப வரிசையின் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு ஆணை அந்தந்த கல்லூரிகள் வழங்கும்.

5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்க பட்ட ஒதுக்கீடு ஆணையின் அடிபடையில் அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்தல்.
 


Post a Comment

0 Comments