Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு- ஆசிரியர்களுக்கான புதிய செய்தி- CERTIFICATE DOWNLOAD

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:


2022 ஆம் ஆண்டிறகான ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக PAPER -II-க்கான கணினி வழி தேர்வுகள் இரு வேலைகளில் நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 15 ஆயிரத்து 430 பேர் தேர்ச்சி பெற்றனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.22 to 27.07.22 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி என்னவென்றால் ஏற்கனவே விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாது என தெரிவித்துள்ளது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் TET PAPER -II- ல் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் CERTIFICATE இன்று(13.04.23) முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments