Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SSC CGL - தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் - வாய்ப்பை நழுவ விடாதீர்கள்



ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம், (SSC) அறிவித்துள்ள ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 7500 குருப் பி மற்றும் குருப் சி பணியிடங்களுக்கான SSC CGL தேர்வினை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத அனுமதி அளித்துள்ளது. 


அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி போன்ற பல்வேறு ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும். (இணையதள முகவரி https://ssc.nic.in)

நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 12.04.2023 (புதன் கிழமை) அன்று முதல் துவக்கப்பட்டு தினசரி மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்புகொண்டு இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments