தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
1.Educational Minister செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
மாநில அளவில் நடத்தப்படும் விநாடி- வினா போட்டியில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட் டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் எனவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல். உரிய முறையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு School-களில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் மூலம் விடுமுறை நாள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு விடுமுறைக்குப் பிறகும் ஒரு மாத காலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும் எனவும்,மாநிலக் கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை வரும் June-ல் முதல்வரிடம் சமர்ப்பித்த பின்னர் அதன் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Summer வெயில் காரணமாக 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
10th வகுப்பு public exam- க்கு தேர்வெழுத பதிவு செய்த Students அனைவரையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தேர்வெழுதவுள்ள 10th standard மாணவர்கள் Corona காலகட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களது வருகைப்பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்ற நடைமுறை வரும் கல்வியாண்டு 2023-2024 முதல் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்