Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Jobs news: வேலைவாய்ப்பு முகாம் - வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 21.04.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.



 இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10th வகுப்பு. 12th வகுப்பு. ITI. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல். கயவிபரக்குறிப்பு (Resume) நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 21.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments